SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தளி அருகே தகராறு அசாம் வாலிபர் குத்திக்கொலை

2/21/2019 4:15:02 AM

தேன்கனிக்கோட்டை,  பிப்.21: தளி அருகே அசாம் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,  அவரது மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை  சேர்ந்தவர் சதிப்(26). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி  கோட்டரெட்டிப்பாளையம் கிராமம் அருகே, தனியார் கோழிப்பண்ணையில்  வேலை பார்த்து வந்தார். இவரது மனைவியின் அண்ணன் பிரதீப்  போராவுடன்(32) அங்கேயே அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில்,  நேற்று முன்தினம் மதியம், இருவரும் அறையில் இருந்தனர். அப்போது  இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர்  சரமாரியாக தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த  பிரதீப் போரா, மறைத்து வைத்திருந்த கத்தியால் சதிப்பை சரமாரியாக  குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சதிப் சரிந்ததை கண்ட பிரதீப்  போரா அங்கிருந்து தப்பியோடி விட்டார்.  இதனிடையே, அறைக்கு வந்த  சிலர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சதிப்பை மீட்டு, ஓசூர் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தளி போலீசாருக்கு  தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு  மருத்துவமனைக்கு சதிப் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர  சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து  கொலை வழக்காக பதிவு செய்த தளி போலீசார், தலைமறைவாக உள்ள பிரதீப்  போராவை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்