SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமூகநல அலுவலக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2/21/2019 4:13:21 AM

தர்மபுரி, பிப்.21: கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கை: ஓர் நிறுத்த மையம் (ஒன் ஸ்டாப் சென்டர்) திட்டத்தில், தர்மபுரி மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டில் அட்மினிஸ்ட்ரேட்டர், சீனியர் கவுன்சிலர், கேஸ் ஒர்க்கர், ஐடி பணியாளர், மல்டிபர்பஸ் ஹெல்ப்பர், செக்யூரிட்டி மற்றும் டிரைவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி அட்மினிஸ்ட்ரேட்டர் பதவிக்கு ₹30 ஆயிரம் மாத சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் சமூகவியல் முதுகலை பட்டத்துடன் 4 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். சீனியர் கவுன்சிலர் பதவிக்கு ₹20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் சமூகவியல் முதுகலை பட்டத்துடன், 2 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். கேஸ்ஒர்க்கர் பணியிடத்திற்கு மாதம் ₹12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பதாரர் சமூகவியலில் முதுகலை பட்டமும், 1 ஆண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். ஐடி பணியாளர் பணியிடத்திற்கு மாத சம்பளமாக ₹18 ஆயிரம் வழங்கப்படும்.

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் இளநிலை பட்டம் பெற்ற பெண்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். மல்டிபர்பஸ் ஹெல்ப்பர் பணியிடத்திற்கு, மாத சம்பளமாக ₹6,400 வழங்கப்படும். விண்ணப்பதாரர் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்துடன், சமையல் தெரிந்திருக்க வேண்டும். செக்யூரிட்டி மற்றும் டிரைவர் பணியிடத்திற்கு மாத சம்பளமாக ₹10 ஆயிரம் வழங்கப்படும். ஒரு அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ் நகல்களிலும், சுய சான்றொப்பமிட்டு, சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையுடன், வரும் 27ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், தர்மபுரி என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: குப்பைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்