SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் துரு பிடித்து வீணாகும் குப்பைத் தொட்டிகள்

2/21/2019 4:12:58 AM

தர்மபுரி, பிப்.21: தர்மபுரி மாவட்ட ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக வழங்கப்பட்ட குப்பை தொட்டிகள், 3 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் வெயிலில் கிடப்பதால், துருப்பிடித்து வீணாகி வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி, 10 பேரூராட்சிகளில் மொத்தம் 251 ஊராட்சிகள் உள்ளன. மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பேரூராட்சிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளில் தனி உரக்கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், குப்பை சேகரிக்க 150 வீடுகளுக்கு 10 பேர் வீதம், தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூய்மை காவலர்களுக்கு தள்ளுவண்டிகள், குப்பை தொட்டிகள், உரக்குழிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளி ஊராட்சிக்கு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கென கடந்த 2015ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக தலா 30 குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்டதில் 17 குப்பை தொட்டிகள், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடுநிலைப்பள்ளி வளாகத்தின் பின்னால் வீணாக கிடக்கிறது. 3 ஆண்டுகளாக வெயில், மழையில் கிடப்பதால் இந்த தொட்டிகள் துருப்பிடித்து காணப்படுகிறது. இதே போல் பைசுஅள்ளி ஊராட்சிக்கு வழங்கப்பட்ட குப்பை தொட்டிகள், துணை சுகாதார நிலையம் அருகே வீணாக கிடக்கிறது.  
இது குறித்து காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமரவேல் கூறுகையில், ‘காரிமங்கலம் ஒன்றியத்தில் பல ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்ட உரக்கிடங்குகள் செயல்படாமல் உள்ளது. குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் உரமாக மாற்றாமல் எரித்து விடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. கெரகோடஅள்ளி ஊராட்சியில் 20க்கும் மேற்பட்ட இரும்பு குப்பை தொட்டிகள் பயன்படுத்தப்படாமல், 3 ஆண்டுகளுக்கும் மேலாக துருப்பிடித்து வருகிறது. எனவே, திடக்கழிவு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்,’ என்றார்.
 இதனிடையே, தர்மபுரி நகராட்சிக்காக தடங்கம் ஊராட்சியில் மிகப்பெரிய உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு பணியாளர்கள் நியமிக்கப்படாததால் குப்பைகள் உரமாக்கப்படாமல் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதே போல் பழைய தர்மபுரி, கோவிலூர், மல்லியக்குட்டை, புலிகரை, மோதூர், பைசுஅள்ளி பூமாண்டஅள்ளி, இலக்கியம்பட்டி உள்பட 251 ஊராட்சிகளிலுமே, திடக்கழிவு உரக்கிடங்குகள் பயன்பாடின்றி மூடியே கிடக்கின்றன. இதனால் திடக்கழிவு மேலாண்மை திட்ட நிதியை, ஊராட்சி நிர்வாகங்கள் வீணடித்து வருகின்றன என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: குப்பைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்