SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐடிஐ மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கம்

2/21/2019 1:15:46 AM

கடலூர், பிப். 21: தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட அரசு (ஐடிஐ) தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான 3 நாட்கள் விளையாட்டு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று காலை தொடங்கின.
அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். திருச்சி மண்டல இணை இயக்குனர் ஜான் போஸ்கோ விளையாட்டு துறையின் கொடியை ஏற்றினார். மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.நாளை (22ம் தேதி )வரை நடைபெறும் இப்போட்டிகளில் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, வலைப்பந்து, ஓட்டப்பந்தயங்கள் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் திருச்சி மண்டலத்தை சேர்ந்த 21 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்