SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெட்டிவேர் சாகுபடி அமோகம்

2/21/2019 1:15:24 AM

புவனகிரி, பிப். 21: மிகவும் குளிர்ச்சியான பயிர் வெட்டி வேர் ஆகும். பல்வேறு நாட்டு மருந்துகளின் தயாரிப்பில் வெட்டிவேர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர பாய் தயாரித்தல், எண்ணெய் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வெட்டிவேரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பரங்கிப்பேட்டை பகுதியில் வெட்டிவேர் விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பரங்கிப்பேட்டை அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் வெட்டிவேர் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. 8 மாத பயிரான இந்த வெட்டிவேரை விவசாயிகள் சிறு கன்றுகளாக வாங்கி வந்து அவற்றை வயல்களில் நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்சி வெட்டிவேரை வளர்த்து வருகின்றனர். இந்த பயிருக்கு தண்ணீர் தான் மிக முக்கியமான ஒன்றாகும்.

அதனால் தண்ணீர் பாய்ச்சுவதில் விவசாயிகள் அதி தீவிரமாக செயல்பட்டு வந்தனர். மேலும் பூச்சித் தாக்குதல்கள் ஏற்படாமல் அவ்வப்போது கண்காணித்து மருந்து தெளித்து வந்ததால் தற்போது வெட்டி வேர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது.வாண்டையாம்பள்ளம், காயல்பட்டு, சின்னாண்டிக்குழி, பெரியாண்டிக்குழி உள்ளிட்ட கிராமங்களிலும் வெட்டிவேர் பயிரிடுவது அதிகரித்து உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 2 டன் வரை வெட்டிவேர் வளரும். ஒரு கிலோ வெட்டிவேர் ரூ.150 முதல்  ரூ.170 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விவசாயிகள் வெட்டி வேர் விவசாயத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்