SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெற்குவிருதாங்கன் கிராமத்தில் திமுக கிராமசபை கூட்டம்

2/21/2019 1:15:14 AM

சேத்தியாத்தோப்பு, பிப். 21:  கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழைக்கொல்லை, தெற்குவிருதாங்கன், கூளாப்பாடிதென்பாதி, பெருங்காலூர், முகையூர் உள்ளிட்ட கிராமங்களில் திமுகவின் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. திமுக தலைமை கழக அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக கடலூர் மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வழிகாட்டலில், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை கி.சரவணன் தலைமையில், கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வாக்கூர் முருகன் முன்னிலையில் இந்த கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கிராமமக்களின் அடிப்படை தேவைகளாக உள்ள சுத்தமான குடிநீர், சாலை வசதி, மயான பாதை அமைத்தல், குடிநீர் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைத்தல், தெருவிளக்குசரிசெய்தல், விடுபட்டுபோன முதியோர் உதவித்தொகை பெறுதல். உள்ளாட்சிகளில் முடங்கிப்போயிருக்கும் பணிகள் குறித்தும் பொதுமக்கள் எம்எல்ஏவுடன் விவாதித்து தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மனுக்களைபெற்றுக்கொண்ட எம்எல்ஏ மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் ஏராளமான கிராமபொதுமக்கள், திமுகவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்