SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பண்ருட்டி டிஎஸ்பி பொறுப்பேற்பு

2/21/2019 1:15:06 AM

பண்ருட்டி, பிப். 21:பண்ருட்டி டி.எஸ்.பியாக பணிபுரிந்து வந்த சுந்தரவடிவேல் கடந்த டிசம்பர் மாதம் பணி ஓய்வுபெற்றார். கடந்த 1 மாதத்திற்கும் மேலாக பணி நிரப்பப்படாமல் இருந்தது. தற்போது பண்ருட்டிக்கு புதிய டிஎஸ்பியாக நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கியூ பிரிவில் டிஎஸ்பியாக பணிபுரிந்தவர். பொறுப்பேற்ற டிஎஸ்பி நாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், நான்குமுனை சந்திப்பில் உள்ள பேரிகார்டு உடனடியாக அகற்றப்படும். போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய இடங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படும். லாட்டரி சீட்டு, சாராயம் அடியோடு ஒழிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் செய்தால் உண்மையான காரணம் இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை உறுதியாக இருக்கும் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்