SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிதம்பரம் நகராட்சியை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

2/21/2019 1:14:57 AM

சிதம்பரம், பிப். 21:  சீர்கெட்ட சிதம்பரம் நகராட்சி மற்றும் தரமற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றை கண்டித்து சிதம்பரம் நகர திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிதம்பரம் வடக்குவீதி தலைமை அஞ்சல் நிலையம் அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்து பேசுகையில், சிதம்பரம் நகராட்சி சீர்கேடுகள், தரமற்ற பாதாள சாக்கடை பணிகள் ஆகியவற்றை கண்டித்து 3வது முறையாக திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. நாங்கள் 33 வார்டு மக்களையும் திரட்டி 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு காவல்துறையிடம் அனுமதி பெற்றோம். ஆனால் திடீரென காவல்துறை வடக்குவீதி தலைமை அஞ்சல் நிலையம் அருகே ஒரே இடத்தில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்துள்ளனர். ஏன் என்று கேட்டால் மேலிடத்து அழுத்தம் என்கின்றனர்.
சிதம்பரம் நகரில் குண்டும், குழியுமான சாலைகளால் அதிகளவில் விபத்துகள் நடந்து வருகின்றன.

தற்போது  பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தரமானதாக நடக்கவில்லை. நகரில் தற்போது போடப்படுகின்ற சாலைகளும் பேப்பர் ரோஸ்ட்களாக அப்படியே சுருட்டுகின்ற அளவில் போடப்பட்டுள்ளன. மக்களுக்கு கழிவு நீர் கலந்த குடிநீர் வழங்கப்படுகிறது. தரமான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வரி வசூல் மட்டும் வேகமாக நடந்து வருகிறது என்றார். ஆர்ப்பாட்டதில் நகர அவைத்தலைவர் தென்னவன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், ராஜேந்திரகுமார்.  மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஜாபர்அலி, முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்பு சத்யநாராயணன், பொறியாளர் அணி அப்பு சந்திரசேகரன், நகர இளைஞரணி தலைவர் மக்கள் அருள், 33வது வார்டு முனியாண்டி, மகளிரணி பூங்கோதை, லதா, முன்னாள் கவுன்சிலர்கள் ராஜன், ராஜராஜன், மணி, விஜயகுமார், விஜயா, வெங்கடேசன், கிருபாகரன், மாணவரணி சுதாகர், தொண்டரணி தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்