SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை புதிதாக தயார் செய்த பின்னர் அரசின் நிதி ரூ2 ஆயிரம் வழங்க வேண்டும்

2/21/2019 1:14:49 AM

நெல்லிக்குப்பம், பிப். 21:  நெல்லிக்குப்பத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை புதிதாக தயார் செய்து தமிழக அரசால் வழங்கப்படும் ரூ. 2 ஆயிரம் நிதியை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பட்டியலில் பெயர் சேர்க்க காத்திருந்தவர்கள் படிவம் காலியானதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தமிழக அரசால் வறுமை கோட்டிற்கு கீழ்  உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கான பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கும் பணி நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடந்து வருகிறது. 2001ம் ஆண்டில் தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பட்டியலின் அடிப்படையில் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்கள் கொடுத்து படிவத்தை பூர்த்தி செய்து வந்தனர். அப்படிவத்தில் ஏழை எளிய எங்களது பெயர் இல்லை என பொது மக்கள் குற்றம் சாட்டினார்கள்.

மேலும் இப்பட்டியல் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தயார் செய்யப்பட்டதால் அப்பட்டியலில் அதிக அளவில் இறந்தவர்களின் பெயரும், அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்களின் பெயரும் இருப்பதாக தெரிகிறது. உண்மையான வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இதனால் உண்மையான ஏழை எளிய பயனாளிகளுக்கு தமிழக அரசின் நிதி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நகராட்சி அலுவலகத்தில் புதிதாக வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்க்கும் மனு வழக்கப்பட்டு அவற்றை பூர்த்தி செய்து கொடுக்கும் பணி நடந்தது. பழைய பட்டியலில் பெயர் இல்லாத ஏராளமானவர்கள் நகராட்சி அலுவலகத்தில் வறுமை கோட்டின் கீழ் தங்களது பெயரை சேர்க்க குவிந்தனர். அப்போது நீண்ட வரிசையில் படிவத்துக்காக காத்திருந்தவர்களை போதுமான படிவங்கள் இல்லாததால் மதியத்துக்கு மேல் திருப்பி அனுப்பினார்கள். அவர்களிடம் வீடு வீடாக வந்து புதிய படிவங்கள் வழங்க அவற்றை பூர்த்தி செய்து வறுமை கோட்டின் பட்டியலில் சேர்க்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் ஏராளமானவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்