SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

கடலூர் நகராட்சி ஆணையர் திடீர் மாற்றம் வளர்ச்சி திட்ட பணிகள் அடியோடு பாதிப்பு

2/21/2019 1:14:30 AM

கடலூர், பிப். 21:  கடலூர் நகராட்சியில் ஆணையர் பொறுப்பு வகித்து வந்தவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆறு மாத காலமாக நிரந்தர ஆணையர் இல்லாமல் உள்ளதால் வரிவசூல் உள்ளிட்டவைகள் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கான அன்றாட பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் தலைநகர் என்ற நிலையில் அதற்கேற்றவாறு நகராட்சியின் செயல்பாடும் அமைந்துள்ளது. 45 வார்டுகளை கொண்ட கடலூர் நகராட்சியில் மாவட்டத்தின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகள் உள்ளிட்ட பல்வேறு முதன்மை ஸ்தாபனங்கள் அமைந்துள்ளது. இது போன்று மக்கள் தொகையும் அதற்கேற்றவாறு கல்வி நிறுவனங்களும் செயல்படுகின்றன. குடிநீர் வரி, வீட்டு வரி, தொழிற்சாலை வரி, தொழில் நிறுவனங்களுக்கான வரி என பல்வேறு வகையில் கடலூர் நகராட்சி செயல்பட்டு வரும் நிலையில் அதன் பணிகளை தலைமை ஏற்று நடத்தக் கூடிய ஆணையர் கடந்த ஆறு மாத காலமாக நிரந்தரமாக இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டு அடிப்படை திட்டங்கள் முடங்கி பொதுமக்கள் திணறி வருகின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், அதிகாரிகளும் உரிய முறையில் பணிகள் மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிரந்தரமாக பணியாற்றி வந்த  ஆணையர் சரவணன் பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அதற்கு பிறகு ஆணையர் பொறுப்பாக நகராட்சிகளின் பொறியாளர் ராமசாமியும் அதைத்தொடர்ந்து விருதாச்சல நகராட்சி ஆணையர் பாலு கூடுதலாகவும் கடலூர் நகராட்சி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தனர். இதற்கிடையே திடீரென நகராட்சி ஆணையர் பொறுப்பு பாலு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கடலூரில் நகராட்சியின் நகர நல அதிகாரி அரவிந்த் ஜோதியை கூடுதலாக ஆணையர் பொறுப்பில் நியமனம் செய்து நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். கடலூர் நகராட்சியில் பல்வேறு வகையில் ரூ. 7.5 கோடி வரை வரி வசூல் பாக்கி நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக நகராட்சியில் பணியாற்றி வரும் அலுவலர்கள், அதிகாரிகளுக்கு மாதந்தோறும் சம்பளம் முழுமையாக வழங்கப்படாமல் போராட்டங்கள் வலுத்து வருகிறது.

இதுபோன்று நகராட்சியினுள் மேற்கொள்ளப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல், வரி கட்டணம் வசூலித்தல், புதிதாக வரி நியமித்தல் என பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கடலூர் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் அரசின் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டர்களுக்கு முழுமையான பணத்தொகை வழங்கப்படாமல் திட்டப்பணிகள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 இதற்கு உதாரணமாக கடலூர் நகரில் ரூ. 100 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அம்ருத் நகர  திட்டப்பணிகள் முடங்கிப் போயுள்ளது. இதேபோன்று எம்பி நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பால பணி திட்டமும் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது திடீரென வரிவசூல் உள்ளிட்ட பணிகள் முடுக்கியுள்ள நிலையில் நகராட்சி ஆணையர் பொறுப்பு பாலு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடலூர் நகரம் மாவட்டத்தின் தலைநகர் என்ற போதிலும் முன்னேற்றத்திற்கு வழி காணாமல் முடங்கிப் போயுள்ளது. அமைச்சர் தொகுதி என்ற நிலையில் நகராட்சி ஆணையரை நிரந்தரமாக நியமித்து மக்களின் திட்டங்களுக்கு சிறப்பான வழி காட்டும் வகையில் நகராட்சியின் செயல்பாட்டை மீண்டும் செழுமைப்படுத்த வேண்டும் என்பது நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்