SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருவேப்பிலங்குறிச்சி அருகே பொது இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி உண்ணாவிரதம்

2/21/2019 1:13:06 AM

விருத்தாசலம், பிப். 21: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே  சாத்துக்குடல் கீழ்பாதியில் உள்ள அய்யனார் கோயில் முன்பு  கடந்த 10 வருடங்களாக தற்காலிக நேரடி நெல் கொள்முதல்  நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் அப்பகுதியில் உள்ள  விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு  வருகின்றது. அதன்படி இந்த வருடமும் அப்பகுதியில் தற்காலிக  நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகள்  கடந்த வாரம் வந்தனர். அப்போது அங்குள்ள தனிநபர் ஒருவர்  கோயிலின் முன்பு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்  கூடாது, வேறு இடத்தில் சென்று அமையுங்கள் என  கூறியுள்ளார். இதனால் அதிகாரிகளும் அந்த இடத்தை விட்டு  விட்டு வேறு ஒரு தனிநபரின் இடத்திற்கு நெல் கொள்முதல்  நிலையம் அமைக்க சென்றுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த  அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, அரசுக்கு சொந்தமான பொது  இடத்தில், சாலை வசதி அடங்கிய, அதுவும் கடந்த 10  வருடங்களாக இயங்கி வந்த அந்த இடத்தை விட்டு விட்டு, வேறு  எங்கும் அமைக்கக் கூடாது.

அவ்வாறு தனிநபரின் இடத்தில்  அமைத்தால் அங்கு பிரச்னைகள் ஏற்படும் எனக்கூறி  அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து அங்கு தற்காலிக நெல் கொள்முதல் அமைக்கும்  பணியை நிறுத்திவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு  சென்றுவிட்டனர். இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக இயங்கி  வந்த அதே இடத்தில் தான், தற்காலிக நெல் கொள்முதல்  நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதியை  சேர்ந்தநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று தற்காலிக  நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்திலேயே  உட்கார்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து அங்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும்  வரை அதில் தொடர் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு  செய்யப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-05-2019

    22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்