SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்பி தேர்தலையொட்டி பழைய குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: தென்மண்டல ஐஜி பேட்டி

2/20/2019 6:06:38 AM

சிவகாசி, பிப். 20: எம்பி தேர்தலையொட்டி பழையை குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சிவகாசியில் தென்மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்திலும் சிவகாசி நகராட்சியில் கே.டி.ஆர் பாலம் அருகிலும் நவீன காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. இந்த மையங்களை தென்மண்டல ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிவகாசி உட்கோட்டத்தில் கூடுதல் போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவகாசி டவுன் போலீஸ் டேசனுக்கு புதிய கட்டிட பணிகள் விரைவில் தொடங்கும். போலீஸ் மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள். எம்பி தேர்தலையொட்டி பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். முன்னதாக விஸ்வநத்தம் புறக்காவல்நிலையம் அருகே மரக்கன்றுகளை தென்மண்டல ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன் நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் டிஐஜி பிரதீப்குமார், விருதுநகர் மாவட்ட எஸ்.பி., ராஜராஜன், டி.எஸ்.பி., க்கள், ராஜா, மதியழகன், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்