SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் டூவீலர்கள் நிறுத்த இடவசதியின்றி போர்ட்டிகோ வரை நிறுத்தும் அவலம்

2/20/2019 6:04:28 AM

திருவாரூர், பிப். 20: திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான உரிய இட வசதி இல்லாததன் காரணமாக அலுவலகத்தின் போர்டிகோ வரையில் வாகனங்களை நிறுத்தும் அவலம் இருந்து வருகிறது.
திருவாரூரில் இயங்கிவரும் கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ அலுவலகம், சமூகநலத்துறை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், பிற்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட கருவூலக அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம் என அரசின் 20க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகங்களில் மனுஅளிப்பதற்காக தினந்தோறும் பொதுமக்கள் பலரும் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அலுவலகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இட வசதி இல்லாததன் காரணமாக அலுவலகத்திற்கு வரும் அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் அலுவலகத்திற்கு செல்லும் வழியிலேயேயும், அலுவலகத்தின் போர்டிகோ வரையிலும் வாகனங்களை நிறுத்தும் அவல  நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு சில நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
எனவே வாகனங்களை ஒதுக்குபுறமாக நிறுத்துவதற்கு உரிய இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்