SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

2/20/2019 6:04:16 AM

முத்துப்பேட்டை,பிப்.20:  முத்துப்பேட்டையில் அனைத்து கட்சி சார்பில்  காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான அமைதி ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடந்தது. முன்னதாக சித்தேரிகுளம் அருகில் இருந்து புறப்பட்ட அமைதி பேரணி ரயில்வே கேட், மன்னை சாலை, குமரன் பஜார் பழைய பேரூந்து நிலையம் வழியாக பேரூராட்சி அலுவலகம் அருகில் சென்று அடைந்து அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சியினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.பின்னர் மவுனஅஞ்சலி செலுத்தினர்.
நீடாமங்கலம்: கூத்தாநல்லூர் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம் சார்பில் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலை  தாக்குதலில் உயிரிழந்த  ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வாழாச்சேரி பாலத்திலிருந்து பொதக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரை அமைதி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில்அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ,கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு மன்னார் குடியில் உள்ள அனைத்து சேவை சங்கங்கள், முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் மற்றும்  அனைத்து கட்சியினர் சார்பில் நினைவஞ்சலி பேரணி நடைபெற்றது. முன்னதாக மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் அருகிலிருந்து துவங் கிய  நினைவஞ்சலி பேரணி முக்கிய கடைவீதிகள் வழியாக சென்று தேசிய மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.
அங்கு  வீர மரண மடைந்த வீரர்களின்  படத்திற்கு எம்எல்ஏ டிஆர்பி ராஜா, காவிரி ரங்கநாதன், பிஆர் பாண்டியன், டிஎஸ்பி அசோகன், முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க தலை வர் விஜயராகவன் உள்ளிட்ட அனைத்து சேவை சங்க நிர்வாகிகள், அனைத்து அரசியல்  கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானனோர் மலர் களை தூவி, மெழுகுவர்த்தி தீபங்களை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் வீர மரண மடைந்த வீரர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்