SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலை விபத்து: இருவர் சாவு

2/20/2019 6:01:37 AM

அவிநாசி,பிப்.20: அவிநாசி அருகே பழங்கரை பச்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர் எம்மக்ரான் (70). இவர் பெரியாயிபாளையத்திலிருந்து நரிக்குறவர் காலனி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியே வேகமாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மக்ரான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல அவிநாசி அருகே பெருமாநல்லூர்வள்ளிபுரம் பசுமை நகரை சேர்ந்தவர் நடராஜ் (56). இவர்  பெருமாநல்லூரிலிருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் பசுமை நகர் அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நடராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெருமாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்