SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியகுளத்தில் ரூ.500 கள்ளநோட்டு புழக்கம் தாராளம்

2/20/2019 5:58:33 AM

பெரியகுளம், பிப்.20: பெரியகுளத்தில் ரூ.500 கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. பெரும்பாலும் டூவீலரில் சில்லரை வாங்க வருவோர் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பெரியகுளம் பகுதியில் சில நாட்களுக்கு முன் ரூ.2000 கள்ளநோட்டு புழக்கத்தில் விடப்பட்டது. டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டை கொடுத்த இருவரை தென்கரை போலீசார் பிடித்தனர். அதனை தொடர்ந்து ரூ.2000 கள்ள நோட்டு புழக்கம் குறைந்தது. தற்போது பெரியகுளம் தாலுகா பகுதியில் ரூ.500 கள்ள நோட்டு புழக்கம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. டுவீலரில் வரும் இருவர் பெட்ரோல் பங்க், மளிகைக் கடை, ஜவுளிக்கடை உட்பட வணிக நிறுவனங்கள், தென்கரை மார்க்கெட்டில் ரூ.50 முதல் 100 வரை பொருட்கள் வாங்குகின்றனர். இதற்கு ரூ.500 கள்ள நோட்டு கொடுத்து மீதமுள்ள பணத்தை வாங்கிச் செல்கின்றனர்.

முகூர்த்த காலங்களில் திருமண மண்டபங்களில் அழைக்காத விருந்தாளியாக செய்முறைக்கு சென்று கள்ளநோட்டை மாற்றுகின்றனர். கடந்த ஒரு வார காலத்தில் 50 கடைக்காரர்கள் தலா ரூ.1000 முதல் 2 ஆயிரம் வரை கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளனர். போலீசில் சொன்னால் விசாரணை என்ற பெயரில் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும் என கருதி அவற்றை கிழித்து விடுகின்றனர். ரூ.500 கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்