SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டம் 23, 24 தேதிகளில் நடக்கிறது உத்தமபாளையம் உட்கோட்டத்தில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

2/20/2019 5:58:24 AM

உத்தமபாளையம், பிப்.20: உத்தமபாளையம் உட்கோட்டத்தில் வாக்காளர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்கள் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடக்கிறது.
உத்தமபாளையம் உட்கோட்டத்தில் உத்தமபாளையம், போடி தாலுகாக்கள் உள்ளன. இதில் கம்பம், போடி, ஆண்டிபட்டி(பகுதி), உள்ளிட்ட தொகுதிகள் அடங்குகின்றன. தேர்தல்ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2019ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 31ல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து 18 வயது நிரம்பிய வாக்காளர்களையும் சேர்க்க வேண்டும் என்பதன் அடிப்படையில் வாக்காளர் சரிபார்த்தல் மற்றும் தகவல் அளித்தல் என்பதை கருப்பொருளாக கொண்டு வரும் 23ம் தேதி மற்றும் 24ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெற உள்ளது.

இந்நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் தங்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளதா என்பதையும், விடுபட்டு இருந்தால் உடனடியாக படிவங்களை வாங்கி பூர்த்தி செய்யவும், 18 வயதினை அடைந்திருந்தால் புதிதாக வாக்காளர்களாக சேரவும் மனு அளிக்கலாம். இதுகுறித்து உத்தமபாளையம் சப்கலெக்டர் வைத்திநாதன் கூறுகையில், ‘‘தேனி கலெக்டர் அறிவுறுத்தலின் அடிப்படையில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தவர்கள் சேர்க்கைக்கு படிவம் 6, இடம்பெயர்தல், இறப்பு ஆகியவற்றுக்கு நீக்கலுக்கான படிவம் 7, விபரம் திருத்தல் செய்ய படிவம் 8, ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ உள்ளிட்ட படிவங்களை பூர்த்தி செய்து வரும் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் தரலாம்’’ என்றார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்