SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விக்கிரமங்கலம் அருகே டிரான்ஸ்பார்மரை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் காலிக்குடங்களுடன் திரண்டனர்

2/20/2019 5:54:09 AM

அரியலூர்,பிப்.20: பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்க கோரி மழவராயநல்லூர் கிராம மக்கள் காலிகுடங்களுடன்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடம்பூர்-  விக்கிரமங்கலம் சாலையில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது மழவராயநல்லூர் கிராமம். இங்கு 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 16ம்தேதி  மழவராயநல்லூர் மேற்குதெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடந்த 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிகுடங்களுடன் கடம்பூர்-விக்கிரமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார், ஊராட்சி செயலர் முருகானந்தம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சம்மந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகளிடம் கூறி டிரான்ஸ்பார்மரை உடனே சீரமைத்து மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கல் கலைந்து சென்றனர். இதனால் கடம்பூர்-விக்கிரமங்கலம் சாலையில் சுமார் 1மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்