SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் தீவிரமாக ஈடுபடுங்கள் திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்

2/20/2019 5:53:55 AM

ஜெயங்கொண்டம், பிப். 20: அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், மற்றும் செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னம்  ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் திமுக தோழர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு மாவட்ட செயலாளர் சிவசங்கர்  கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை:  23,24ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களில் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வரும் 23,மற்றும் 24-ம் தேதி வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்க,மற்றும் பெயர்கள் நீக்க- மற்றும் திருத்தம் செய்ய மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும்,இடம்  மாறிய வாக்காளர்களும், 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களைச் சேர்க்க,  நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, அந்தப்படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் 2019ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும்- -புதியதாகக் குடி பெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்,தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கும் நாட்களில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு கழக செயலாளர்,நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் (பிஎல்2) ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்