SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூரில் 5 ஆண்டுக்கு பிறகு பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசி தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்

2/20/2019 5:52:23 AM

பெரம்பலூர்,பிப்.20: பெரம்பலூரில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசித் தேரோட்டம் வெகு விமரிசையாக  நடந்தது.
 பெரம்பலூரின் புகழ் பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேத  பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேரோட்டத் திருவிழா கடந்த 2013க்குப் பிறகு  5 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து பெரம்பலூர் தர்மபரிபாலன  சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை  இணை ஆணையர்(ஸ்ரீரங்கம்)கல்யாணி, உதவி ஆணையர் (அரியலூர்) தக்கார் முருகையா  ஆகியோரது உத்தரவின்பேரில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 8ம்தேதி பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் கோயில் செயல் அலுவலர் மணி தலைமையில் முகூர்த்தக்கால் நடப்பட்டு, 11ம்தேதி திருத்தேரோட்ட விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி  வெகு விமரிசையாக நடந்தது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் ஹம்ச  வாகனம், சிம்ம வாகனம், ஷேச வாகனம், சந்திர பிரபை வாகனம், பஞ்சமூர்த்திகள்  புறப்பாடு, யானை வாகனம், புஷ்பக விமானம், கைலாச வாகனம் ஆகியவற்றில் சுவாமி வீதியுலா நடத்தப்பட்டன. விழாவின் 7ம்நாளான 17ம்தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

  இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்  உற்சவம் நேற்று(19ம் தேதி) காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் நடைபெற்றது.  உற்சவர் ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரர் எழுந்தருளிய  திருத்தேரினை கோயில் குருக்களான சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில்,  உதவி குருக்கள் கவுரிசங்கர் ஆகியோர் வழிபாடு நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில்  இந்து சமய அறநிலையத்துறை (அரியலூர்) உதவி ஆணையர் தக்கார் முருகையா, கோயில்  செயல் அலுவலர் மணி முன்னிலை வகித்தனர். முன்னாள் அறங்காவலர்குழுத் தலைவர்  கணேசன், பழனியப்பன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், முக்கிய  பிரமுகர்களான பூபதி, தர்மராஜ், கீத்துக்கடை குமார், பூக்கடை சரவணன்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க திருத்தேர் வடம்பிடித்து  இழுக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது.இதில்  பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை, எளம்பலூர், நொச்சியம், விளாமுத்தூர்,  சிறுவாச்சூர், புதுநடுவலூர், எசனை, கோனேரிப்பாளையம், சோமண்டாபுதூர்,  ஆலம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்  கலந்துகொண்டனர். மாலையில் தேர் நிலைக்குவந்து நின்றவுடன் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சியுடன்  திருத்தேர் நிகழ்ச்சி முடிவடைந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்