SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கை பணி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

2/20/2019 5:52:01 AM

பெரம்பலூர், பிப்.20:  கோடைகாலத்தில் குடிநீர்த் தட்டுபாட்டை போக்கும் வகை யில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலருமான அணில்மேஷ்ராம் பெரம்பலூரில் நேற்று கலெக்டர் சாந்தா முன்னிலையில் நேரில் ஆய்வு செய்தார்.எதிர்வரும் கோடைகாலத்தில் குடிநீர்த் தட்டுபாட்டை போக்கிடும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் செயலருமான அணில்மேஷ்ராம், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட செட்டிக்கு ளம் மலை அடிவாரம் பகுதியில் தெரு குழாய்களில் குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அலுவலர் அணில் மேஷ்ராம், பொதுமக்க ளிடம் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை, எவ்வளவு நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது, போதுமான அளவில், தட்டுபாடின்றி குடிநீர் வினியோகம் செய்யப் படுகிறதா என்பது குறித்து விரிவாக கேட்டறிந்தார். மேலும் கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏதுவாக  பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் பொது மக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் கிடை ப்பதை தொடர்புடைய அலுவலர்கள் முழுமையாக கண்காணித்து, அது தொடர்பாக தேவையான நடவடிக்கை களையும் சம்மந்தபட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செட்டிக்குளம் ஆதிதிராவிடர் காலனித் தெருவிற்கு குடிநீர் வழங்குவதற்கான கிணற்றை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர், குடிநீர் கிணற்றை சுத்தமாக பராம ரிக்கவும், குடிநீர் கிணறு தேவையற்ற பொருட்கள் மூலம் மாசுப்படுவதைத் தடுக்கும் வகையில் இரும்பினால் ஆன வலைகளை அமைக்கவும் உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவ ட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி, குரும்ப லூர் பேரூராட்சி,  பெரம்பலூர் மாவட்ட த்தில்  31கிராம குடியிருப்புகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில்  31 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு திருச்சி மாவட்டம்  தாளக்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டு மின் மோட்டார்  மூலம் தச்சன்குறிச்சியில் அமைந்துள்ள 2.34 லட்சம் லிட்டர்  நீர் உந்து  நிலையத்திற்கு  நீர் கொண்டு வரப்பட்டு, அதிலிருந்து  நீர் உந்தப்பட்டு 1.92 லட்சம் லிட்டர் நீர் உந்து  நிலைய த்தில் பெரகம்பி பகுதியில் நிரப்பப்பட்டு, அதிலிருந்து 2 மின் இறைப்பான்கள் மூலம் செட்டிகுளத்தில் அமைந்துள்ள 4 லட்சம் லிட்டர் நீர் சேகரிப்புத் தொட்டி மற்றும் பெரம்பலூர் நகராட்சி, குரும்ப லூர் பேரூராட்சி மற்றும் 15 ஊராட்சிக ளிலுள்ள 31கிராம குடியிருப்புகளுக்கு  குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.    இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 20 லிட்டர் முதல் 55 லிட்டர் வரை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தபட்டு வரும் கூட்டு குடிநீர்த் திட்டப்பணிகளை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர்க ள், கோடைக்காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அளவு குடிநீர் வழங்கு வதற்கு தேவையான முன்னெச்சரி க்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வும், இதன் மூலம் பெரம்பலூர் மாவட்ட த்தில் குடிநீர்த் தட்டுபாடு இல்லாத நிலைமையை ஏற்படுத்தவும் தொடர்பு டைய அலுவலர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் செயல ருமான அணில்மேஷ்ராம் உத்தரவிட்டார் இந்த ஆய்வுகளின்போது பெரம்பலூர் மாவட்ட  மகளிர் திட்டஇயக்குநர் தேவநா தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய த்தின் நிர்வாகப்பொறியாளர் முருகேசன், உதவி நிர்வாகப் பொறியாளர்கள் சக்திவேல், சிவப்பிரகாசம், ஆலத்தூர் தாசில்தார் ஷாஜஹான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்