SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

மார்ச் 12ம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

2/20/2019 5:51:28 AM

பெரம்பலூர்,பிப்.20: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், ஓய்வூதிய இயக்குநரகத்தின் அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை இயக்குநரான கயிலைநாதன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும்நாள் கூட்டம் வருகிற மார்ச் மாதம் 12ம்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த குறைதீர்க்கும் மனுக்களை 2 பிரதிகளாக வருகிற மார்ச் மாதம் 7ம்தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால்மூலமாகவோ கொடுக்கலாம். மார்ச் 12ம்தேதி  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்திலும் கலந்துகொண்டு பயன் பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்