SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூர் மாவட்டத்தில் 23, 24ல் சிறப்பு முகாம் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா? வாக்காளர் சரிபார்த்து கொள்ளலாம்

2/20/2019 5:51:01 AM

பெரம்பலூர், பிப்.20: பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 23, 24ல் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்துக்கொள்ளலாம் என பெரம்பலூர்  கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல், 2019ஐ முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம்-2019 (Voter Verification and Information Programme - VVIP) என்ற திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி வாக்காளர்கள் 2019 ஜனவரி 31ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு முகாம், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 23, 24 ஆகிய இரு தினங்களிலும் நடைபெறவுள்ளது.  இந்த முகாமில் 2019 ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைப் பதிவு செய்ய அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம்-6ஐ அளிக்கலாம்.  மேலும் பெயர் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான படிவங்களை அளித்து திருத்தம் மேற்கொள்ளலாம். வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான மற்றும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் பதிவு தொடர்பான வினாக்களுக்கு 1950 என்ற வாக்காளர் உதவி கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் Voter Helpline ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
 18 வயது நிறைவடைந்து நாளது வரை தனது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திடாத நபர்கள் www.nvsp.in என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர்கள் அனைவரும் மேற்கண்ட முகாம் நாட்களில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சரிபார்த்துக் கொள்ளலாம். 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-05-2019

    22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்