SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரியாக செயல்படுத்தாத 2 நுண்ணீர் பாசன நிறுவனங்கள் அங்கீகாரம் ரத்து கலெக்டர் தகவல்

2/20/2019 5:50:31 AM

பெரம்பலூர், பிப்.20: பாசன நீரை சேமிக்க உதவும் நுண்ணீர்ப் பாசனத்திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் செலுத்த வேண்டிய நுண்ணீர்ப் பாசன அமைப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை தமிழக அரசே ஏற்றுள்ளது. நுண்ணீர் பாசனத் திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.32.77 கோடி நிதி ஒதுக்கீட்டில் 6,331 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை மற்றும் வேளாண் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிப்பதற்காக வேளாண் உற்பத்தியாளர் மற்றும் முதன்மை செயலரின் தலைமையில் 2 வாரங்களுக்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. ஆய்வுக் கூட்டத்தில் நுண்ணீர்ப் பாசன நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள். தமிழகத்தில் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் 41 நுண்ணீர்ப் பாசன நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் எவர்கிரீன் இர்ரிகேசன் மற்றும் “பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நுண்ணீர்ப்பாசன நிறுவனங்களும் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை.  எனவே, அந்நிறுவனங்களுக்கு குறிப்பிடும்படி முன்னேற்றம் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆயினும், அந்நிறுவனங்கள் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தை செயல்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காத காரணத்தால் மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் அனுமதியுடன் அந்நிறுவனங்களுக்கு  தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் அளிக்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் எவர்கிரீன் இர்ரிகேசன், பூர்மா பிளாஸ்ட் (பி) லிட் நிறுவனங்களை அணுக வேண்டாம் என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

 • StalinElectionCampaign19

  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

 • NorwayUnderRestaurant

  ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்