SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்தரிப்புலத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

2/20/2019 5:49:29 AM

வேதாரண்யம், பிப்.20: வேதாரண்யம் தாலுகா கத்தாிப்புலத்தில்  கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5000 மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு நேதாஜி சமூக நல அமைப்பின் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார்.  செயலாளர் ஞானசேகரன் வரவேற்றார்.
இப்பகுதியில் கஜா புயலில் ஆயிரம் கணக்கான தென்னை மா உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்தனர்.  இவர்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காக கோயமுத்தூர் ஒய்ஸ்மென் தொண்டு நிறுவனமும் நேதாஜி சமூக நல அமைப்பினரும் சேர்ந்து 5000 மரக்கன்றுகளை பல்வேறு கிராமங்களுக்கு வழங்கினர். மேலும் தலா ரூ. 1லட்சம் மதிப்பில் புதிதாக 7 வீடுகளை கட்டி வழங்கினர். விழாவிற்கு ஒய்ஸ்மென் அமைப்பின் திட்ட இயக்குநர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார், தலைவர் வெங்கடாசலம், திட்ட இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்