SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்வேறு மருத்துவ குணம் கொண்ட நார்த்தை மரங்கள் அழிவில் இருந்து பாதுகாக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

2/20/2019 5:49:13 AM

தரங்கம்பாடி, பிப்.20: பழம், வேர், மலர் என ஒவ்வொன்றிலும் மருத்துவ குணங்களை கொண்ட நார்த்தை மரங்கள் வீட்டுக்கு வீடு இருந்த நிலை மாறி இப்பொழுது காண்பதே அரிதாகி விட்டது. அழிவிலிருந்து அரசு நார்த்தை மரங்களை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நார்த்தை மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடிய மரமாகும். இதனுடைய வேர், பூ, பழங்கள் அனைத்திலும் செயல்திறன் மிக்க வேதிய பொருட்கள் அடங்கியுள்ளன. வைட்டமீன்கள், அமினோ அமிலங்கள், இனிசைன், குளுடாமிக் அமிலம், நாரிங்கின், சிட்ரல் உள்ளிட்ட வேதிய பொருட்கள் உள்ளன. மரத்தின் பூக்கள் தசைகளை இறுக்கி செயல் ஊக்கியாக பயன்படுகிறது. அதே போல் மரத்தின் வேர், வாந்திக்கும் வயிற்று புழுக்களை அழித்து மலச்சிக்கல், மற்றும் சிறுநீரகக் கல் நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. பழத்தின் தோல் வயிற்று புண்ணை ஆற்றும் மருந்தாக விளங்குகிறது. மேலும் நார்த்தங்காயை எந்த வடிவத்தில் உணவில் சேர்த்து கொண்டாலும் அது உடலில் உள்ள ரத்தத்தை தூய்மைபடுத்துகிறது. நார்த்தை பழம் ஜூஸ்ஸாக அருந்தும் போது உடல் சூடு குறைந்து  புத்துணர்ச்சி கிடைக்கிறது. இப்பழசாரை மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். ரத்தம் மாசடைந்து ரத்தத்தில் உள்ள வௌ்ளையனுக்கள் பாதிக்கப்படுவதை நார்த்தம் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து தடுத்து நிறுத்துகிறது. கர்ப்பிணி பெண்கள் காலையும், மாலையும் நார்த்தம்பழம் சாறு எடுத்து தண்ணீரில் கலந்து ஒரு ஸ்பூன் தேன் விட்டு அருந்தி வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும். வாயு தொல்லையால் அவதிபடுவார்கள் நார்த்தம்பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து பருகி வந்தால் வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம். எல்லா காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம்பழத்தை தினமும் சாப்பிட்டால் நீண்டு ஆயுளுடன் வாழலாம்.
இப்படி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நார்த்தை மரம் அத்திபூத்தார் போல் எங்காவது சில இடங்களில் மட்டுமே உள்ளது. இந்த கோடை காலத்தில் நார்த்தம் பழ ஜூஸ்ஸ் அருந்துவதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் பழ ஜூஸ்ஸ் கடைகளில் நார்தம் பழஜூஸ் முக்கிய இடம் பெறுகிறது.
இதுகுறித்து நார்த்தங்காய் ஜூஸ்ஸ் விற்பனை செய்யும் ராஜா என்பவா; கூறியதாவது. நான் பொறையாரில் பல ஆண்டுகளாக ஜூஸ் மற்றும் சர்பத் வியாபாரம் செய்கிறேன். ஆனால் என்னிடம்  நார்த்தம் பழ ஜூஸ்க்கு தான் மக்கள் அதிகம் வரவேற்பு இருக்கிறது. நார்தம் பழ ஜூஸ் உடன் சிறிதளவு மிளகு தூளையும் போட்டு குடுப்பேன். அது மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். நார்த்தம் பழத்துக்காக நார்த்தம் மரத்தை மொத்தமாக குத்தகை எடுத்து அந்த மரத்தில் இருந்து பழங்களை பறித்து ஜூஸ் போடுகிறேன். பெரும்பாலானவர்களுக்கு நார்த்தம் பழம் கிடைக்காததால் ஜூஸ் போட முடியாமல் உள்ளனர். தற்போது நார்த்தம் பழ மரங்கள்  அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அழிவில் இருந்து அரசு பாதுகாக்க வேண்டும் என்றார்.
விவசாயி தில்லையாடி கலியபெருமாள் கூறியதாவது :  தயிர் சாதம் என்றாலே நார்த்தங்காய் தான் நியாபகம் வரும். தயிர் சாதமும், நார்த்தங்காய் ஊறுகாயும் கொடுக்கும் சுவையை யாரும் எளிதில் மறக்க முடியாது. வீட்டுக்கு வீடு இருந்த நார்த்தை மரம் இப்போது எங்கு இருக்கிறது என்று தேட வேண்டி  இருக்கிறது. இந்த நார்த்தம் மரங்களை அழிவில் இருந்து அரசு மீட்க வேண்டும். அரசின் தோட்டக்கலைதுறையில் நார்த்தங்காய் வளர்ப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. இனியேனும் தோட்டக்கலை மூலம் வீட்டுக்கு வீடு நார்த்தங்காய் வளர்க்கின்ற சூழ்நிலையை அரசு உருவாக்கி தர வேண்டும். என்று கூறினார்.
புத்துணர்ச்சி கிடைக்கும்
நார்த்தங்காயை எந்த வடிவத்தில் உணவில் சேர்த்து கொண்டாலும் அது உடலில் உள்ள ரத்தத்தை தூய்மை படுத்துகிறது. நார்த்தை பழம் ஜூஸ்ஸாக அருந்தும் போது உடல் சூடு குறைந்து  புத்துணர்ச்சி கிடைக்கிறது. இப்பழசாரை மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.  
சுகப்பிரசவம் எளிதில் நடக்கும்
ரத்தம் மாசடைந்து ரத்தத்தில் உள்ள வௌ்ளையனுக்கள் பாதிக்கப்படுவதை நார்த்தம் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து தடுத்து நிறுத்துகிறது. கர்ப்பிணி பெண்கள் காலையும், மாலையும் நார்த்தம்பழம் சாறு எடுத்து தண்ணீரில் கலந்து ஒரு ஸ்பூன் தேன் விட்டு அருந்தி வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை
நாகை, பிப்.20:நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருபயத்தங்கடி பி.எஸ்.ஆர். காலனி தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (38) சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி அனுராதா (30).  விவசாய கூலி. இவர்கள் தங்கள் குடும்ப செலவிற்காக அதிக அளவில் கடன் வாங்கியுள்ளனர்.  கடன் கொடுத்தவர்கள் பரசுராமன் வீட்டிற்கு வந்து  கடன் தொகையை திருப்பு கேட்டுள்ளனர். வீட்டில் பரசுராமன் இல்லாததால் அனுராதாவிடம்  பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.  இதனால் அனுராதா மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார்.
இந் நிலையில் அனுராதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுராதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்