SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகை மாவட்டத்தில் எச்ஐவி பாதிப்பு குறைந்துள்ளது கலெக்டர் தகவல்

2/20/2019 5:48:48 AM

நாகை, பிப். 20:நாகை மாவட்டத்தில் எச்ஐவி பாதிப்பு குறைந்துள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில்  தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டுப்£ட்டு சங்கம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் ஆய்வகத்தை நாகை கலெக்டர் சுரோஷ்குமார் தொடங்கி வைத்தார். அப்போது பேசுகையில் ஹெச்.ஐ.வியின் தா’கத்தை குறைக்கவும், காசநோய் தொற்றுகளை 2020க்குள் முற்றிலும் ஒழிக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. முகாம்கள் மூலம் ஹெச்.ஐ.வி. கிருமி தாக்குதலுக்கு ஆளானவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஹெச்.ஐ.வி.  தாக்கம் அதிகமாக  இருந்தது. தமிழநாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் நடத்திய பரிசோதனைகளால் ஹெச்.ஐ.வி.பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஆயிரம் பேருக்கு 4 ஆக இருந்த நிலையல் தற்போது 3 ஆக குறைந்துள்ளது என்றார்.  
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில்
ரூ.1.50 கோடியில்
மீன் ஏல கூடம் திறப்பு
335 பேருக்கு இலவச வெள்ளாடு வழங்கல்
வேதாரண்யம், பிப்.20: வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட மீன் ஏலக்கூடத்தை அமைச்சர் திறந்து வைத்து 335 பேருக்கு இலவச வெள்ளாடுகளையும் வழங்கினார்.
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் கடற்கரை அருகே அப்பகுதி மீனவர்கள் மீன்களை ஏலம் விடுவதற்கு வசதியாக மீன்வளத்துறை மூலம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக மீன் ஏல கூடம் கட்டப்பட்டது.
 இந்த மீன் ஏல கூடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்து மீன் ஏலத்தையும் துவக்கி வைத்தார்.
பின்னர் கோடியக்கரையில் 335 குடும்பங்களுக்கு  தலா 4 ஆடுகள் வீதம் விலையில்லா வௌ்ளாடுகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாட்ட கலெக்டர் சுரேஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற  தலைவர் கிரிதரன், மீன்வளத்துறை செயற் பொறியாளர் ராமநாதன், முன்னாள் மீனவர் சங்க செயலாளர் சித்திரவேலு மற்றும் மீனவ சங்கத்தை சேர்ந்த பாலசுந்தரம், ஞானசேகர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கோடியக்கரையில் 335 ஏழை குடும்பங்களுக்கு  தலா 4 ஆடுகள் வீதம் விலையில்லா வௌ்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு 12ஆயிரம் ரூபாயில் ஆடுகள்  வழங்கப்படுகிறது. கோடியக்கரையில் உள்ள மீனவர்களும், வெளி மாவட்ட மீனவர்களும் பயன்பெறும் வகையில் மீன் ஏலக்கூடம்  மற்றும் வலை பின்னும் இடம் கட்டி இறக்கப்பட்டுள்ளது  என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்