SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீர்காழியில் 20 ஆண்டாக துருப்பிடித்து கிடக்கும் அரசு ஜீப் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சொந்தமானது

2/20/2019 5:48:02 AM

சீர்காழி, பிப்.20: சீர்காழியில் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சொந்தமான ஜீப் கடந்த 20 ஆண்டாக துருப்பிடித்து வருகிறது.சீர்காழியில் வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட இருப்பதால், இங்கு செயல்பட்டு வந்த வட்ட வழங்கல் அலுவலகம் தற்போது சீர்காழியில் உள்ள திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சொந்தமான ஜீப் பழுதாகி அதனை சரிசெய்யாமல் ஓரங்கட்டப்பட்டு இருந்தது. இந்த ஜீப்பில் இருந்த நான்கு டயர்களும் மாயமானது. மேலும், ஜீப்பில் உள்ள பல பொருட்கள் திருட்டுபோய் வெறும் இரும்பாக மட்டும் காட்சியளிக்கிறது. இன்னும் கொஞ்ச நாளைக்கு அந்த ஜீப் அங்கேயே நின்றால் ஜீப் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். கடந்த 20 ஆண்டுகளாக எந்த பயன்பாடும் இல்லாமல் நிறுத்தப்பட்டிருக்கும் ஜீப்பை ஏலம் விட்டு அரசிற்கு வருவாய் ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்