SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10 ஆண்டாக தூர்ந்து கிடக்கும் சென்னியநல்லூர் ஊராட்சி குளம் தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

2/20/2019 5:46:17 AM

கொள்ளிடம், பிப்.20:  கொள்ளிடம் அருகே 10 ஆண்டாக தூர்வாரப்படாத சென்னியநல்லூர் ஊராட்சி குளத்தை தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம், அருகே சென்னியநல்லூர் கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் ஊராட்சிக்குச் சொந்தமான குளம் உள்ளது. இங்குள்ள திரவுபதி  அம்மன் கோயிலுகு எதிரே அமைந்துள்ளதால் திரவுபதிஅம்மன்குளம் என்று ஊர்ப் பொதுமக்களால் அழைக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் இந்தக் குளம் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. இக்குளத்திற்கு பாசன வாய்க்காலிலிருந்து தண்ணீர் குளத்திற்கு தாராளமாக சென்று தேக்கி வைக்கும் வகையிலும், தண்ணீரை குளத்திலிருந்து எளிதில் வடிய வைக்கும் வகையிலும் வாய்க்கால் வசதி உள்ளது. இந்த குளத்தை சென்னியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கு குடிநீராகவும் இந்த குளத்து நீரைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் குளத்தை தூர்வாராமல் விட்டுவிட்டதால், இக்குளம் குறுகியும், தூர்ந்தும் போயுள்ளது. தற்பொழுது வயல் போன்று காட்சியளிக்கிறது. கோடைக்காலங்களில் இந்தக் குளத்தில் தண்ணீர் வற்றாமல் இருந்த இக்குளம் தற்பொழுது தூர்ந்து போய் மேடாகியுள்ளது.
எனவே, நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையிலும், ஊர்ப்பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் நன்மைக்காகவும், திரவுபதி அம்மன் குளத்தை அகலப்படுத்தியும் ஆழப்படுத்தியும் தூர்வார உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு திட்ட தலைவர் செந்தில்குமார் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்