SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

வேதாரண்யம் பகுதி நெல்கொள்முதல் நிலையங்களில் காத்துகிடக்கும் விவசாயிகள் 700 மூட்டைகள் மட்டுமே வாங்குவதால் தேக்கம்

2/20/2019 5:45:25 AM

வேதாரண்யம், பிப்.20:வேதாரண்யம் பகுதியில் நாள் ஒன்றுக்கு 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் நெல் கொள்முதல் பணிகள் தேக்கமடைந்துள்ளது.  இதனால் விவசாயிகள் நெல்லை விற்பதற்கு காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வேதாரண்யம் பகுதியில் சுமார் 25 இடங்களில் செயல்பட்டுவரும் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  மானாவாரி நிலப் பரப்பில் தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் சாக்குகள் பற்றாக்குறை நெல்லுக்கு உரிய பணம் வங்கி கணக்கு மூலம் வழங்கப்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் நெல்லை விற்க முடியாமலும், பணம் பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.  இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 700 மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்யவேண்டும் என கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பல நாட்கள் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பதற்கு  காத்திருக்க வேண்டியுள்ளது.
 
    அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலைய வளாகத்துக்கு கொண்டு சென்றால் மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.  டோக்கன் வரிசைப்படி கொள்முதல் செய்ய காத்திருப்பதோடு நெல்லை ஆங்காங்கே கொட்டி குவித்து வைத்து காத்திருக்க நேரிடுகிறது. எனவே நாள் ஒன்றுக்கு 700 மூட்டைகள் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி தொழிலாளர் எத்தனை மூட்டைகளை எடை வைக்க முடியுமோ அந்த அளவுக்கு கொள்முதல் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும்  விவாசாயிகள் நெல்லை கொள்முதல் செய்யும் நிலையில் வியாபாரிகள் மூலம் வரும் நெல் கொள்முதல் செய்வதில் சில இடங்களில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 230 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 2500 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களுக்கு பொங்கல் சிறப்பு ஊதியமும், மாத சம்பளமும் இதுவரை கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்