SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரூரில் ₹70 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

2/20/2019 5:45:05 AM

அரூர், பிப்.20: அரூரில் நடைபெற்ற ஏலத்தில் ₹70 லட்சத்திற்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் வாரந்தோறும் பருத்தி  ஏலமும் நடைபெற்று வருகிறது. அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர் மற்றும் கோட்டப்பட்டி  உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் ஏலத்திற்கு 549 விவசாயிகள் 3300 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். பின்னர், நடைபெற்ற ஏலத்தில் ஆர்சிஎச் ரகம் குவிண்டால் ₹4,969 முதல் ₹5,439 வரையிலும் ஏலம் போனது. வரலட்சுமி(டிசிஎச்) ரகம் ₹6,669 முதல் ₹6,989 வரை விற்பனையானது. ஆக மொத்தம் 3300 பருத்தி மூட்டை ₹70 லட்சத்திற்கு விற்பனையானது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்