SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூளகிரி அருகே டிரான்ஸ்பார்மரை தள்ளி காயில் திருட்டு

2/20/2019 5:42:43 AM

சூளகிரி, பிப்.20: சூளகிரி அருகே, டிரான்ஸ் பார்மரை தள்ளி, காயில் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சூளகிரி தாலுகா காமன்தொட்டி ஊராட்சி உஸ்தல பள்ளியில், காமன் தொட்டி-புக்காசாகரம் சாலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் மூலம், இப்பகுதியில் 40 குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தெரு விளக்குகள், பாசன மின் மோட்டார்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய மர்ம நபர்கள் சிலர், போல்ட் நட்டுகளை அகற்றி, டிரான்ஸ் பார்மரை கீழே தள்ளினர். பின்னர் அதிலிருந்த ₹2.60 லட்சம் மதிப்பிலான அலுமினியம், காப்பர் பொருட்களை திருடிச்சென்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இதை தொடர்ந்து சூளகிரி உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணன், சூளகிரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில், இன்ஸ்பெக்டர் முருகன், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.  ஏற்கனவே, கட்டு காணப்பள்ளி, ஒமதே பள்ளியில், அடிக்கடி பெரிய அளவில் குறிவைத்து பல லட்சத்திற்கு மின் ஒயர் திருடபட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்