SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஜாபுயலில் சாய்ந்த மின்கம்பங்களால் பயிர்கள் பாதிப்பு புதிய கம்பங்கள் நட்டு உடனே மின் சப்ளை

2/15/2019 6:54:44 AM

ஆலங்குடி, பிப்.15: கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி அதிகாலை கஜாபுயல் வீசியது. இதனால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் உட்பட 7 மாவ ட்டங்கள் பெரும் பாதிப்படைந்தன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற் பட்ட பாதிப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல், எதிர் காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியது. ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங் கலம், அணவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல் உட்பட பல்வேறு பகுதிகளிலும், கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட மாங்கோட்டை, தெற்குத்தெரு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு, வாண்டான்விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம ங்களும் கஜாபுயல் காற்றால் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. மேலும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருந்துவந்த நீண்டகால பயிரான தென்னை கிட்டத்தட்ட முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் கூலிதொழிலாளி முதல் முதலாளிகள் வரை அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த பாதிப்பால் விவசாயிகளுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலகோடி ரூபாய் வரவு செலவுகள் முற்றிலும் முடங்கி விட்டன. அதேபோல், ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பயிரிடப்பட்டிருந்த வாழை முற்றிலும் சேதமடைந்தது.

இதனால் பலகோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. இதனால் வாழை விவசாயிகள் பெரும் சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும், கஜாபுயல் தாக்கத்திலிருந்து எஞ்சிய நெல், காய்கறி, பூ, கடலை உள்ளி ட்ட பயிர்களை காப்பாற்ற மின்சாரம் தேவைப்படுகிறது. மேலும், அதிக அளவில் பணம் கொடு க்கும் விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து மின் இணைப்பு வழங்கி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் ஆலங்குடி அருகேயுள்ள நம்பன்பட்டியில் கஜாபுயல் ஆடிவிட்டு சென்று 83நாட்களாகியும், இதுவரையிலும் அப்பகுதியில் மின்சாரம் கிடைப்ப தற்கான எந்தவிதமான பணிகளிலும் ஈடுபடாமல் உள்ளனர். இதனால், அப்பகு தியில் மின்சாரமின்றி ஆழ்துளை கிணறுகள் இயங்காமல், தண்ணீரின்றி கதிர் குழைதள்ளும் நிலையில் இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் கருக தொடங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் கருகிய பயிர்களை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர்.

எனவே, கஜாபுயலால் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல் வாழ்க்கையை இழந்த விவசாயிகளுக்கு அரசு உரியநிவாணம் வழங்குவதோடு, எஞ்சியுள்ள கருகும் பயிர் களை காப்பாற்ற உடனடியாக மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தது தொடர்பாக கடந்த 9ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் நட்டு உடனடியாக மின்சாரம் வழங்கினர். இதுகுறித்து உரிய நேரத்தில் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அதிகாரி களுக்கும் அப்பகுதி விவசாயிகள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்