SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் முன்னேற்ற தொழில் முனைவோர் நிகழ்ச்சி

2/15/2019 12:24:04 AM

விழுப்புரம், பிப். 15: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பெண் முன்னேற்ற தொழில் முனைவோர் நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு விருந்தினராக மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி பங்கேற்றார். ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் வரவேற்புரை வழங்கினார். துணிக்கடை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் மகாலட்சுமி குரூப்ஸ் ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இஎஸ்எஸ்கே கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் விழுப்புரம் சமூகநீதி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் சாமிக்கண்ணு நோக்கவுரை வழங்கினார். அவரது உரையில் கிராமப்புற பெண்கள் அனைத்து துறையிலும் தன் கால் தடங்களை பதித்து வருகின்றனர். விண்வெளி துறையில் கால் பதிக்கும் அளவுக்கு மாணவர் சமுதாயம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் அருணகுமாரி, சிறப்பு விருந்தினர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை பற்றி அறிமுகவுரை ஆற்றினார். அதில் பல்வேறு சமூக நல அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்படக்கூடியவர் என்று புகழாரமும் சூட்டினார்.

 பின்னர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பேசும் போது, இந்தியாவின் எதிர்கால தூண்கள் இளம் தலைமுறையினர். அவர்கள் இன்றைய காலகட்டத்தில் பிரச்னைகளையும், சவால்களையும் எதிர்கொள்வதற்கு பல்வேறு மொழிகளை கற்றுக்கொண்டு சிறந்து விளங்க வேண்டும். மகாத்மா காந்தி முதல் முதலாக பெண்களுக்காக போராடியவர். பெண்கல்வி அவசியம். 55 ஆண்டுகளில் பெண் கல்வியை 4 லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் பிரதமர் நரேந்திர மோடியால் கல்வி கற்றுள்ளனர் என கூறினார். இந்நிகழ்ச்சியில் லயன் ஆர்.சந்திரன், சரவணன், சண்முகம், ஜெயகுமார், ராமமூர்த்தி மற்றும் பல்வேறு தொழில் துறை சாதனையாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தெய்வானை அம்மாள் கல்லூரியின் முதுகலை ஆங்கிலத்துறை மாணவி அர்ச்சனா, புதுடெல்லியில் பிரதமர் மோடி பங்குபெறும் பாராளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும், குவாரியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் இணை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் தெய்வானை அம்மாள் கல்லூரியின் தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைப்பாளர் விஜய சண்முண்டீஸ்வரிக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி சிறப்பு செய்தார். இந்நிகழ்ச்சியின் நிறைவாக தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-06-2019

  20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • SiberiaPolarBearStreet

  ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

 • RahulBirthday2k19

  கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

 • GrassBridgePeru

  ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

 • RoyalAscot2k19

  இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்