SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

2/8/2019 5:40:03 AM

மதுரை, பிப். 8: மதுரை மாவட்ட கண்மாய்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
 மதுரையைச் சேர்ந்த அழகர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் ராஜகம்பீரத்தில் கண்மாய் உள்ளது. சுற்று வட்டார பகுதி விவசாய மற்றும் குடிநீர் தேவையில் பெரும் பங்கு வகிக்கிறது.
பொருசுபட்டி பகுதி விவசாயமும் செழித்தது. தற்போது இந்த கண்மாய் குப்பை மேடாக உள்ளது. சுற்றுப் பகுதி கழிவுநீர் இங்கு கலக்கிறது. இதனால் ெதாற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கண்மாயில் கழிவுகள் அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. எனவே, கண்மாயை தூர்வாரி சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் மதுரை மாவட்டத்தில் எத்தனை கண்மாய்கள் உள்ளன. இதில் எத்தனை கண்மாய்களில் தூர்வாரும் பணி நடந்துள்ளது. கண்மாய்களின் நிலை என்ன என்ற விபரத்தை கலெக்டர் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப்.25க்கு தள்ளி வைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்