SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனுதர்ம சாசன நகல் எரிப்பு போராட்டம் திருச்சியில் திகவினர் 75 பேர் கைது

2/8/2019 5:37:19 AM

திருச்சி, பிப். 8: திருச்சியில் மனுதர்ச சாசனநகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திகவை சேர்ந்த 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகள் இருப்பதாகக்கூறி மனுதர்ம சாசன நகலை எரிக்கும் போராட்டம் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று நடத்தப்படும் என்று திக அறிவித்தது. இதனால் அண்ணாசிலை அருகில் கோட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திட்டமிட்டப்படி அங்கு மாவட்ட மகளிரணி தலைவி அரங்கநாயகி தலைமையில் திகவினர் கூடி
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது திடீரென ஆர்ப்பாட்டக்காரர்கள் மனுதர்ம சாசன நகலை தீ வைத்து எரிக்க முயன்றனர். இதனால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும் தடையை மீறி, மனு தர்ம சாசன நகலை தொடர்ந்து எரிக்க முயன்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மதுரை ரோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட திக தலைவர் ஆரோக்கியராஜ் கூறுகையில், பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாஸ்திர நகலை எரிக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் திக சார்பில் நடந்து வருகிறது என்றார். போராட்டத்தில் நிர்வாகிகள் நற்குணம், ஆல்பர்ட், வால்டேர், மோகன்தாஸ், அங்கமுத்து, கிரேசி, ரஜினி உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்