SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெல் தொமுச தொழிற்சங்க தேர்தல்

2/8/2019 5:37:03 AM

திருவெறும்பூர், பிப்.8: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள  பெல்  நிறுவனத்தின் தொமுச தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்காக நடந்த  தேர்தலில் தீபன் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  
திருவெறும்பூர்  அருகே உள்ள பெல் நிறுவனத்தின் தொமுச தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் 3  ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அதன்படி புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று  முன்தினம் நடந்தது. இதில் தலைவர் உட்பட 26 பதவிகள் அடங்கும் .தலைவர்  பதவிக்கு போட்டி கிடையாது. மற்ற 25 பதவிகளுக்கான
தேர்தல் நேற்று நடந்தது.  
இதில் சரவணன், தீபன், கணேஷ்குமார் ஆகிய 3 பேர்கள் தலைமையில்  மும்முனை போட்டி நடந்தது. பெல்  கம்னியூட்டி சென்டரில் நடந்த தேர்தலில் பெல் தொமுச தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரத்து 508 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் தீபன் 667 வாக்குகள் பெற்று பொதுச்  செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முருகானந்தம் பொருளாளராகவும், திவாகர்  அமைப்பு செயலாளராகவும், பரமேஷ்வரன் துணை பொதுச் செயலாளர், சதீஷ்குமார், ஆறுமுகம், பூபாலன், ஜோசப்ஸ்டாலின், சதீஷ்குமார், பாபு, ரமேஷ்குமார், ராஜன்  ஆகிய 8  பேர் துணை தலைவர்களாகவும், சங்கர், விஜயபாண்டியன், முத்துகுமார், சசிகுமார், பவுல் ஆண்ட்ரூஸ், அங்குசாமி, சாமிநாதன், கருப்பு, சுரேஷ் சிவ  கொழுந்து, கணேஷ்ராம், ரவிசங்கர், பால்ராஜ் ஆகிய 13 பேர் துணை செயலாளர்கள்  ஆகிய 25 பேர் புதிய நிர்வாகிகளாக
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நேற்று  முன்தினம் இரவு தொடங்கிய வாக்கு எண்ணும் பணி நேற்று காலை வரை நீடித்தது.  தேர்தல் அலுவலராக பிஎஸ்என்எல் தொமுச தொழிற்சங்க கன்வீனர் விஜயகுமார்  செயல்பட்டார் தொழிற்சங்க தேர்தலின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல்  இருப்பதற்காக திருவெறும்பூர் போலீசார் பாதுகாப்பு பணி
யில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்