SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பார்சல் சர்வீஸ் ஊழியரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி 8 கிலோ தங்கம் கொள்ளை

2/8/2019 4:24:48 AM


கோவை, பிப்.8: கோவை பீளமேட்டில் நேற்று பட்ட பகலில் பார்சல் சர்வீஸ் ஊழியர் கண்களில் மிளகாய் பொடி துாவி பைக்கில் வந்த மூன்று மர்ம மனிதர்கள் எட்டு கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாங்கோசிங் மகன் பிரதீவ்சிங்(26). இவர் கோவை மரக்கடை மில் ரோடு பகுதியில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வருகிறார். கோவையில் உள்ள நகை பட்டறைகளில் புதிதாக தயாரிக்கப்படும் தங்க நகைளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு வியாபாரிகள் இந்த தனியார் பார்சல் சர்வீசிடம் கொடுப்பது வழக்கம். இதன்படி, கோவை நகை வியாபாரிகளால் வழங்கப்பட்ட 8 கிலோ தங்கம் அடங்கிய பார்சலை  பிரதீவ்சிங் மும்பை அனுப்புவதற்காக, நேற்று காலை தன்னுடைய ஸ்கூட்டரின் முன்பக்கம் வைத்து கோவை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பிரதீவ்சிங் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது, பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த 3 பேர், அவர் வாகனத்தில் மோதியுள்ளனர். பின்னர் பிரதீவ்சிங் கண்களில் மிளகாய் பொடி தூவினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை தாக்கி, அவர் வைத்திருந்த 8 கிலோ தங்கம் அடங்கிய பார்சலை பறித்துக் கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீவ்சிங் தனது நிறுவன அதிகாரிகளுக்கும் பீளமேடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.  சம்பவ இடத்திற்கு சென்ற கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண், குற்றப்பிரிவு இணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் பாஸ்கர் ஆகியோர் பிரதீவ் சிங்கிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் ஏதாவது தடயம் கிடக்கிறதா? என்றும், அங்குள்ள கடைகளில் உள்ள சி.சி.டிவி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2.75 கோடி ஆகும்.கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில், 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் நடந்த இந்த நகை கொள்ளை சம்பவம் நகை வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

 • jetairweys_delli11

  வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்