SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை அரசு மருத்துவமனையில் ரூ.9.5 கோடியில் புதிய கட்டிடம்

2/8/2019 4:24:41 AM

கோவை, பிப்.8:  கோவை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மூன்று பிரிவுகளுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, புதிய அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்கப்பட்டதன் காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 19.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இம்மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 1,300க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும்,  ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இதன் காரணமாக இம்மருத்துவமனையில் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தீவிர சிகிச்சை பிரிவு, பிணவறை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் அமைத்து சிகிச்சை பிரிவுகளை நவீனப்படுத்த அரசு உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி, பழைய கட்டிடங்களை இடிக்க தற்போது அனுமதி பெறப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க டெண்டர் விடப்பட்டது. இதன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்தரவேல் கூறுகையில், ‘‘இந்த புதிய கட்டிடம் ரூ.9.5 கோடி செலவில், மூன்று மாடிகள் கொண்ட கட்டிடமாக 1,050 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. கட்டிடத்தின் முதல் தளத்தில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவும், இரண்டாம் தளத்தில் தீக்காய சிகிச்சை பிரிவும், மூன்றாம் தளத்தில் முழு உடல் பரிசோதனை பிரிவும் அமைக்கப்படுகின்றன. இந்த மூன்று பிரிவுகளும் முன்பு இருந்ததை விட நவீனபடுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்