SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உக்கடம் குளக்கரையில் பள்ளி மாணவர்கள் ேகாஷ்டி மோதல்

2/8/2019 4:24:33 AM

கோவை, பிப்.8: கோவை உக்கடம் குளக்கரையில் பள்ளி மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதினர். பொதுமக்கள் மாணவர்களை கண்டித்து விரட்டினர். கோவை உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் நேற்று மாலை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சீருடையுடன் குளக்கரை முன் குவிந்தனர். அவர்கள் சிலர் கையால் தாக்கினர். அடித்து உதைத்து கொண்டனர். மாணவர்களின் ேகாஷ்டி மோதலை பார்த்த பொதுமக்கள் அவர்களை எச்சரித்து விரட்டினர். கலைந்து செல்ல மறுத்த மாணவர்களை போலீசில் ஒப்படைப்போம் என எச்சரித்து அனுப்பினர்.  கடந்த சில நாட்களாக மாணவர்கள் பள்ளி விட்டதும், குளக்கரை மற்றும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இவர்களில் சிலர், குறிப்பிட்ட சில மாணவர்களிடம் வாக்குவாதம் செய்து தாக்குவதாக தெரிகிறது. சுங்கம் பைபாஸ் ரோட்டில் பாரி நகர், அபிராமி நகர், சிவராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் சீருடையுடன் சுற்றி கொண்டிருக்கிறார்கள். இவர்களை தாக்க சில மாணவர்கள் வலம் வருகின்றனர்.

 மாணவர்களின் ேகாஷ்டி மோதலால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மாணவர்கள் பள்ளி விட்டதும் வீட்டிற்கு செல்லாமல், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கூட்டமாக கூடுகிறார்கள். அவர்களில் சிலர் போதை பழக்கத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. வெவ்வேறு பள்ளி மாணவர்கள் யார் பெரியவர் என கோஷ்டியாக மோதி ெகாள்வது வாடிக்கையாக நடப்பதாக தெரிகிறது.  பள்ளி விடும் நேரத்தில் மாணவர்களின் அத்துமீறல், மோதலை தடுக்க போலீசார் ரோந்து பணி நடத்தி கண்காணிக்கவேண்டும். தவறு செய்யும் மாணவர்கள் குறித்து அவர்களது பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பைபாஸ் ரோடு பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்