பாறைகளாக தென்படும் நீர்மின் கதவணை ஓமலூர் அருகே சாலை விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்
2/8/2019 4:17:44 AM
ஓமலூர், பிப்.8: ஓமலூர் அருகே சாலை விதிகளை மீறிய 3 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில், 30வது சாலை பாதுகாப்பு வாரவிழா சுங்கச்சாவடி அருகே நடந்தது. இதில், டூவீலர் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவும், கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் சென்ற 125 வாகனங்களை சோதனையிட்டதில், முறையான ஆவணங்கள், பராமரிப்பு, போதிய பாதுகாப்பு வசதியின்மை உள்ளிட்ட குறைபாடுகள் காணப்பட்ட 2 சரக்கு வாகனங்கள், ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமீறிய பல்வேறு வாகன ஓட்டிகளுக்கு ₹42,500 அபராதம் விதித்தனர். பின்னர், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதில், ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மின் கசிவால் தீவிபத்து
சேலம் மேற்கு கோட்டத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மேட்டூர் அரசு ஐடிஐ.,யில் சி.என்.சி ஆபரேட்டர், எம்.ஆர்.ஏசி பயிற்றுநர் தற்காலிக பணியிடங்கள்
இடைப்பாடியில் சட்ட விழப்புணர்வு முகாம்
சடையம்பாளையத்தில் மானாவரி வேளாண்மை பயிற்சி
பராமரிப்பின்றி கிடக்கும் சிறுவர் பூங்கா வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கும் புதிய குடியிருப்பில் அடிப்படை வசதி
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்