SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனியார் கல்லூரியில் பேராசிரியரின் டூவீலர் தீ வைத்து எரிப்பு

2/8/2019 4:17:36 AM

காடையாம்பட்டி, பிப்.8:  காடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டியில், தனியார் பொறியியல் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த கல்லூரியில், மேச்சேரியை சேர்ந்த  அண்ணாமலை என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், மாணவர்கள் தங்கும் விடுதி  காப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். கல்லூரி முடிந்து தினமும் விடுதியிலேயே தங்கிக்கொள்வது வழக்கம். நேற்று முன்தினம், விடுதி முன்பு தனது டூவீலரை நிறுத்தி விட்டு, தூங்கச் சென்றார். நள்ளிரவில் கல்லூரி  வளாகத்திற்குள் புகுந்த மர்மநபர்கள், டூவீலரை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதில் டூவீலரின் பெட்ரோல் டேங்க் வெடித்தது. சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த பேராசிரியர் அண்ணாமலை மற்றும் மாணவர்கள் வெளியே வந்து பார்த்த போது, தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் டூவீலர் முழுவதும் எரிந்து சாம்பலானது. இது குறித்து அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார், மாணவர்கள் மற்றும் காவலாளி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்