SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறு விவசாயிகள் ₹6000 நிதியுதவி பெறும் திட்டம் யார், யாருக்கு கிடைக்காது மத்திய அரசு விளக்கம்

2/8/2019 12:58:17 AM

புதுடெல்லி, பிப்.8: சிறு விவசாயிகள் ஆண்டுக்கு ₹6 ஆயிரம் நிதியுதவி பெறும் திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்துவோரை கொண்ட குடும்பத்தினர் அல்லது முன்னாள் இந்நாள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் பயன்பெற முடியாது என றிவிக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் 2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கப்படும் என நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருந்தார். ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் 12 கோடி சிறுவிவசாயிகள் பலன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது.இந்த நிதியுதவியில் முதல் தவணையை வரும் மார்ச் 31ம் தேதிக்கு முன்பாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2வது தவணை நிதியை பெற ஆதார் அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொகையை யார் பெறலாம் என்பது தொடர்பாக மத்திய அரசு தற்போது வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சிறு விவசாயிகள் என்பது 2 ஹெக்டேர் விவசாய நிலத்தை சொந்தமாக ெகாண்ட குடும்பத்தை குறிக்கிறது. இதில் கணவன், மனைவி தவிர மைனர் குழந்தைகள் இருக்கலாம். இதில் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற மத்திய மாநில அரசு பணியாளர்களை கொண்ட விவசாய குடும்பத்தினர் இந்த உதவியை பெற முடியாது. இது தவிர கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களும் இந்த ₹6000 நிதியை பெற முடியாது. நிதி பெறஅனைத்து தகுதி உள்ள நிலையில் அந்த குடும்பத்தில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள், சார்ட்டட் அக்கவுண்டன்ட்கள் இருந்தால் அந்த குடும்பம் இந்த நிதியை பெறமுடியாது. இது தவிர தற்போது எம்பிக்களாக எம்எல்ஏக்களாக, அமைச்சர்களாகவோ அல்லது முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்களாகவோ இருந்தாலும் அவர்கள் நிதி பெறமுடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்