SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை

2/8/2019 12:58:08 AM

சென்னை, பிப். 8: தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (52). இவர் கடந்த 2017ம் ஆண்டு, வீட்டின் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது 7ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி ஒருவர் டெய்லர் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமியை அழைத்து முனியப்பன் தவறாக நடந்துள்ளார். இதனால் சிறுமி அழுதுள்ளார். இதனை பார்த்த அருகே இருந்த ஒருவர், சிறுமியின் தாயிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளார்.புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் முனியப்பன் மீது வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முனியப்பனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்