SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ்காரரை பைக்கில் இருந்து தள்ளிய இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதியாதது ஏன்?: அபிராமபுரம் ஆய்வாளர் நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

2/8/2019 12:58:00 AM

சென்னை, பிப். 8: தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்த தர்மனுக்கு, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விடுமுறை கொடுக்க மறுத்ததால் அவர் தனது ஆதங்கத்தை வயர்லஸ் கருவி மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது இருபைக்கில் சென்ற தர்மனை வழிமறித்து விரட்டியதில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் இந்த சம்பவம் சி.சி.டி.வி. கேமரா காட்சி வெளியானதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் போலீஸ் கமிஷனர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி, கூடுதல் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் ரவிச்சந்திரனுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மார்ச் 12ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மீது தர்மனின் மனைவி கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்பது குறித்து அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். தேனாம்பேட்டை சம்பவத்துக்கு பின்னர், அம்பத்தூரில் பணியில் சேர்ந்த ரவிச்சந்திரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன ஓட்டியிடம் பணம் பெறுவது போன்று வெளியான வீடியோவை தொடர்ந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்