SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீரகனூரில் அரசு பள்ளி முன் வேகத்தடைக்கு வர்ணம் பூசாததால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

1/24/2019 2:23:53 AM

கெங்கவல்லி, ஜன.24:வீரகனூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடிக்காததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
கெங்கவல்லி தாலுக்காவிற்கு உட்பட்ட வீரகனூர் பேரூராட்சியில், அரசினர் மேல்நிலை பள்ளியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகம் எதிர்புறம் ஆத்தூர்- வீரகனூர் சாலை சந்தைப்பேட்டை அருகே பள்ளி மாணவர்களின் நலன் கருதி, 2 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைக்கு நீண்ட நாட்களாக வெள்ளை அடிக்காமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக வந்து, அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மக்கள் புகார் கூறியும், நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருகின்றனர். இதனால் வீரகனூர் மோட்டார் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், சொந்த செலவில் வேகத்தடைக்கு வெள்ளை அடிக்கப்பட்டது. தற்போது இந்த ேவகத்தடையில் வெள்ளை நிற பெயிண்ட் இல்லாததால், மீண்டும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், வேகத்தடைக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்