சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
1/24/2019 2:23:45 AM
சேலம்,ஜன.24: சேலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது.சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு, பக்கத்து வீட்டை சேர்ந்த சந்திரன் (35) என்பவர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சேலம் சைல்டுலைன் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டபோது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்த சந்திரன் குறித்து சிறுமி தெரிவித்தார். இதுபற்றி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்போதைய இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சந்திரனை கைது செய்தனர். அப்போது விசாரணையில் அச்சிறுமியை அவரின் தந்தையின் நண்பரும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சந்திரனுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ₹35 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து சந்திரனை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
காரிப்பட்டி போலீசாரை கண்டித்து கலெக்டர் ஆபீஸ் முன்பு பெண்கள் திடீர் தர்ணா
சேலம் ஆவினை லாபத்தில் இயக்க 15 நாடுகளுடன் ஒப்பந்தம்
பேரூராட்சி நிலத்தை ஆக்கிரமித்து புதிய கட்டிடம்
கைலாசநாதர் கோயில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படாததால் பக்தர்கள் ஏமாற்றம்
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு மாவட்டத்தில் 13 மையங்களில் வினாத்தாள் வைப்பு
மருத்துவ முகாம்
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு
உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி