SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் 2013ம் ஆண்டு நடந்த இன்ஜினியர் கொலையில் தலைமறைவானவர் சரண் மத்திய சிறையில் அடைப்பு

1/24/2019 2:23:29 AM

சேலம், ஜன.24: சேலத்தில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த இன்ஜினியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர், நீதிமன்றத்தில் சரணடைந்தார்.சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் இன்ஜினியர் வினோத்குமார். இவரை கடந்த 2013ம் ஆண்டு அன்னதானப்பட்டி பகுதியில் வைத்து மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இவ்வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத போலீசார், கடந்த 2017ம் ஆண்டு வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அம்மாபேட்டையை சேர்ந்த ஹோட்டல் அதிபர் கோபியை வீராணத்தை சேர்ந்த திருமணிகண்டன், அவரது நண்பர் ஏழுமலை ஆகியோர் கடத்திச் சென்று திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் கொலை செய்து வீசினர். இவ்வழக்கில் திருமணிகண்டன், ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஹோட்டல் அதிபர் கோபியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இன்ஜினியர் வினோத்குமாரை 2013ம் ஆண்டு பொன்னம்மாபேட்டையை சேர்ந்த சதீஸ்குமார், காமேஸ்வரன் ஆகிய இருவர் மூலம் ₹3 லட்சம் பணம் கொடுத்து கொன்றதாக தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் இன்ஜினியர் வினோத்குமார் கொலை வழக்கை அன்னதானப்பட்டி போலீசார் எடுத்து நடத்தினர். அதில் கடந்த ஆண்டு சதீஸ்குமாரை கைது செய்தனர். தலைமறைவான காமேஸ்வரனை போலீசார் தேடி வந்தனர். இந்த சூழலில் சென்னை ஐகோர்ட்டில் காமேஸ்வரன் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் நேற்று, போலீசாரால் தேடப்பட்டு வந்த காமேஸ்வரன் (28), சேலம் ஜே.எம்.4 கோர்ட்டில் சரணடைந்தார். அவரிடம் விசாரித்த மாஜிஸ்திரேட் மைதிலி, சரணடைந்த காமேஸ்வரனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனால் அவரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

  • thaaymoli_thinam12

    உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • BeijingPalacelight

    வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்