பொற்கொல்லர்களை நியமிக்க வலியுறுத்தல்
1/22/2019 1:13:58 AM
விழுப்புரம், ஜன. 22: கைவினைஞர் முன்னேற்றக்கட்சியின் ஆலோசனைக்கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாநில அமைப்பாளர் உமாபதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆச்சாரியா, சிவக்குமார், முருகேசன், பொருளாளர் செந்தில்குமார், பொதுச்செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புயல் பாதித்த மாவட்டங்களில் மரத்தச்சுப்பட்டறைகளை, கொல்லுப்பட்டறைகளை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் மரத்தச்சர்களுக்கும், இரும்பு கொல்லர்களுக்கும் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். பட்டறைகளை சரிசெய்ய வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் பாரம்பரிய பொற்கொல்லர்களை நிரந்தர நகைமதிப்பீட்டாளராக நியமிக்க வேண்டும். இந்துசமய அறநிலையத்துறைநிர்வாகிக்கும் கோயில்
களில் பராமரிப்பு தொழில்நுட்ப கலைஞர்களாகவும், அர்ச்சகர்களாகவும் பொற்கொல்லர்களை நியமிக்க
வேண்டும்என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
முன்விரோத தகராறில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்
மா.கம்யூ., கட்சியினர் 67 பேர் கைது
2 கூரை வீடுகள் எரிந்து நாசம்
திருநங்கைகளுக்கு உதவி தொகை ₹24,000 ஆக உயர்த்த ேகாரிக்கை
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு