SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக ஊராட்சி சபை கூட்டம்

1/22/2019 1:13:22 AM

சின்னசேலம், ஜன. 22: கல்வராயன்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லியம்பாடி கிராமத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உதயசூரியன் தலைமை தாங்கினார். கல்வராயன்மலை (தெ) ஒன்றிய செயலாளர் சின்னதம்பி முன்னிலை வகித்தார். பொட்டியம் ஊராட்சி செயலர் லட்சுமணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் உதயசூரியன் எம்எல்ஏ திமுக ஆட்சிக்காலத்தில் மலை மக்களுக்கு செய்த திட்டங்கள் பற்றி
 விரிவாக பேசினார். அப்போது பொதுமக்கள் குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ கூறினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் தனபால், முத்துசாமி, முன்னாள் சேர்மன் விமலா ராஜவேல், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதைப்போல தொரடிப்பட்டு, வெள்ளிமலை, உள்ளிட்ட  பகுதிகளில்திமுக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்